'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

Mahendran

வியாழன், 9 அக்டோபர் 2025 (13:57 IST)
திண்டுக்கல்லில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வின் கூட்டணி அரசியலை மறைமுகமாக விமர்சித்தார்.
 
அவர் பேசுகையில், "என்றைக்கும் 'கை' நம்மை விட்டுப் போகாது" என்று காங்கிரஸ் கட்சி குறித்து சூசகமாக குறிப்பிட்டார். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப்போவதாகப் பரவும் தகவல்களுக்கு இடையே உதயநிதி இவ்வாறு பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
 
தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சித்த அவர், "பா.ஜ.க.வுக்கு ஏற்கெனவே இ.பி.எஸ். என்ற அடிமை இருக்கிறார். தற்போது அவர்கள் புதிய அடிமை கிடைப்பார்களா என்று தேடி கொண்டிருக்கிறார்கள். எத்தனை அடிமைகள் வந்தாலும் தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது" என்று சவால் விடுத்தார்.
 
முன்னதாக, ஈரோட்டில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றி கழக தொண்டர்களை குறிப்பிட்டு, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டதாக கூறியிருந்தார். இந்த சூழலில், உதயநிதியின் இந்த கடுமையான விமர்சனங்கள் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்