தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. : டுவிட்டரில் மாற்றம் செய்த ராகுல் காந்தி
ஞாயிறு, 26 மார்ச் 2023 (11:04 IST)
காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி என மாற்றம் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி என்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனை அடுத்து அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆடுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்களவைச் செயலர் ராகுல் காந்தியின் எம் பி பதவியை தகுதி நீக்கம் செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி என தனது பயோவில் குறிப்பிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பு ஏற்படும்