ஆனால் தற்போது ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் யார் வேண்டுமானாலும் மாதம் 8 டாலர் செலுத்தி ப்ளூ டிக் வசதியை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். மேலும் பிரபலங்களின் பெயரில் உருவாக்கப்படும் பரோடி கணக்குகளில் பரோடி என குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால் முன் அறிவிப்பின்றி கணக்கு நீக்கப்படும் என கூறியிருந்தார்.
இதுபோக மேலும் சிலர் இத்தாலிய எலான் மஸ்க், எலான் மஸ்க்கின் பசு என விதவிதமான பெயர்களில் அக்கவுண்ட் தொடங்கி அதற்கு பளூடிக்கும் வாங்கியுள்ளனர். இந்த எலான் மஸ்க் போலி அக்கவுண்டுகளும், ப்ளூ டிக்குகளும் சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியல் ஆகி வருகின்றது.