காங்கிரஸ் ட்விட்டர் முடக்கம்: பெங்களூர் நீதிமன்ற உத்தரவுக்கு ஐகோர்ட் தடை!
செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:51 IST)
காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தை பெங்களூர் நீதிமன்றம் முடக்கிய நிலையில் அந்த உத்தரவுக்கு தடை விதித்து கர்நாடக மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய ஒற்றுமை பயணம் ஆகிய இரண்டு டுவிட்டர் கணக்குகளையும் முடக்க நேற்று பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
கேஜிஎப் திரை படத்தின் இசையை ராகுல் காந்தியின் வீடியோவுக்கு அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசை நிறுவனம் தொடர்ந்த காப்புரிமை வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பெங்களூர் நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக நீதிமன்றம் தடை விதித்தது
அதே நேரத்தில் காப்புரிமை விதி மீறல் என குறிப்பிட்ட பதிவுகளை நீக்க காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது