ட்விட்டரை வாங்க டெஸ்லாவுக்கு ஆப்பு வைத்த மஸ்க்? – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

புதன், 9 நவம்பர் 2022 (10:58 IST)
சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதற்கான தொகையை தனது டெஸ்லா கார் நிறுவன பங்குகளை விற்று ஈட்டியதாக தெரிய வந்துள்ளது.

உலக பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை சமீபத்தில் உலக பில்லியனரான எலான் மஸ்க் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ட்விட்டரின் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார் எலான் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்க தனது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் விற்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 3.95 பில்லியன் டாலர் மதிப்பிலான 19.5 மில்லியன் பங்குகளை அவர் விற்றதாக அமெரிக்க பரிவர்த்தனை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,500 கோடி மதிப்பிலான டெஸ்லா கார் நிறுவன பங்குகளை எலான் மஸ்க் விற்றதால், நிறுவன பங்குகளை விற்கவேண்டிய நிலைக்கு மற்ற முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்களாம். இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கீழ் சரிந்துள்ளதாம்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்