நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

Mahendran

வியாழன், 31 ஜூலை 2025 (10:17 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க.வால் தொடங்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு" திட்டத்தில் பல போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது, இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஜூலை 1 ஆம் தேதி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு" திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் குறைந்தது 30 சதவீதம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது முக்கிய விதியாகக் கொள்ளப்பட்டது. 
 
ஆனால், தற்போது "‘ஓரணியில்  தமிழ்நாடு" திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களிடம் தொலைபேசி மூலம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பலர், "நாங்கள் உறுப்பினர்களாக சேரவில்லை, வெறும் நம்பர் மட்டும் கேட்டார்கள், கொடுத்தோம்," என்றும், "தி.மு.க.வில் உறுப்பினராகச் சேரவில்லை" என்றும் பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மொத்தத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் தோல்வி அடைந்ததாக  பரவலாக பேசப்படுவது" பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கட்சிக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், திட்டத்தின் வெற்றி வாய்ப்பு குறித்தும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது..
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்