தேர்தலில் தோற்ற பிறகு புதினுடன் ரகசியமாக பேசினாரா டிரம்ப்? அதிர்ச்சி தகவல்

Siva
புதன், 9 அக்டோபர் 2024 (18:10 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் போட்டியிட உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கு பின்னர் அவர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஏழு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தற்போது வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுடன் பேசும்போது, தன்னுடைய உதவியாளர்களை கூட டிரம்ப் வெளியேறச் செய்துவிட்டு, புதினுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், டொனால்ட் டிரம்புக்கு எதிரான அலை வீசி வருகிறது என கூறப்படுகிறது. ஏற்கனவே, கமலா ஹாரிஸ் வெற்றி உறுதி என கூறப்படும் நிலையில், இந்த தகவல் காரணமாக டிரம்ப் தோல்வி உறுதி என கூறப்படுகிறது.

ஆனால், இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ள டிரம்ப்,  இதில் துளியும் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்