ஆசிரியர்களுக்கு இன்று சம்பளம் விடுவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

Siva
புதன், 9 அக்டோபர் 2024 (18:08 IST)
கடந்த செப்டம்பர் மாதம், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் போடவில்லை என்ற நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, இன்று ஆசிரியர்களுக்கான சம்பளம் விடுவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சம்பளம் கிடைக்காததால் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என்றும், எனவே ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மத்திய கல்வி அமைச்சரிடம் இரண்டு முறை கோரிக்கை வைத்தும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி வரவில்லை என்றும், அதனால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை என்றும், தற்போது மாநில அரசு நிதியில் இருந்து ஆசிரியர்களுக்கு சம்பளமாக பகிர்ந்து அளிக்க ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்