இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. கடைசி நேரத்தில் டிரம்புக்கு பரிந்துரை செய்த உக்ரைன் அதிபர்..!

Siva

வெள்ளி, 10 அக்டோபர் 2025 (10:21 IST)
உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
 
இந்த நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை நிறுத்தியதற்காகவே தனக்கு நோபல் வழங்க வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறியிருந்தார்.
 
இதற்கிடையில், பாகிஸ்தான் உட்பட ஒரு சில நாடுகளின் அதிபர்கள் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்துள்ளனர். இன்று பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில், உக்ரைன் அதிபரும் டிரம்ப்புக்கு நோபல் பரிசு கொடுக்க பரிந்துரைப்பேன் என்று கூறியுள்ளார்.
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவதில் டிரம்ப் எடுத்த முயற்சிகளுக்காக இந்த பரிந்துரையை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, டிரம்பின் நீண்ட கால கனவான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்