இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு போர்களை நிறுத்தியுள்ளதால் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு தனக்கு பரிசு வழங்காவிட்டால் அது அமெரிக்காவை அவமதிப்பதாக அர்த்தம் என்றும் அவர் பேசியுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ், இந்தியா - பாகிஸ்தான் உள்பட 8 போர்களை தான் நிறுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப் "ஆனால், எதுவும் செய்யாத ஒருவருக்கு பரிசு வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும்" விமர்சனம் செய்துள்ளார்.
அக்டோபர் 10ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில், "தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும்" என்று டிரம்ப் தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி, சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் கூறினாலும், ஹமாஸ் அமைப்பு இன்னும் அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.