750,000 பெடரல் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்களா? டிரம்ப் அதிர்ச்சி திட்டம்..!

Siva

வெள்ளி, 3 அக்டோபர் 2025 (11:57 IST)
அமெரிக்காவில் தற்போது நிலவும் அரசாங்க முடக்கத்தின் விளைவாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயிரக்கணக்கான மத்திய அரசு பணிகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் இதுகுறித்து விளக்கமளித்தபோது, நிர்வாகத்தின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகாத நிறுவனங்களை ஆய்வு செய்து வருவதாகவும், சில நிறுவனங்கள் வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 
சில துறைகளில் இருந்து பெடரல் அரசுக்கு எந்த பணமும் வரவில்லை. ஜனநாயக கட்சியினர் அரசாங்கத்தை முடக்க தேர்வு செய்த துறைகள் இனியும் தொடர்ந்தால் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
 
அதிபர் டிரம்ப் ஏற்கனவே, எந்தெந்த நிறுவனங்கள் தற்காலிக அல்லது நிரந்தரமாக மூடப்படும்  என்பதை தீர்மானிக்க ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 750,000 பெடரல் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம். இதனால் ஒரு நாளைக்கு 400 மில்லியன் டாலர் வரை ஊதியம் அரசுக்கு மிச்சப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்