வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்னிந்திய பகுதிகளில், முக்கியமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில வாரங்களில் நல்ல மழை பெய்துள்ளது. மேலும் இந்த மழை அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K