ஒரு பெரிய திருப்பமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கு விதிக்க திட்டமிட்டிருந்த 50% இறக்குமதி வரியை 8 நாட்களுக்கு தாமதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜூன் 1ல் நடைமுறைக்கு வரவிருந்த இந்த வரிகள், இப்போது ஜூலை 9 வரை தள்ளி வைக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவதற்கான கால அவகாசம் கிடைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என டிரம்ப் தெரிவித்தார்.
“நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன், அவர்கள் பேச தயாராக இருக்க வேண்டும்,” என டிரம்ப் கூறினார். லெயனுடன் சீக்கிரம் சந்தித்து தீர்வு காண முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கு 50% வரி விதிக்கவுள்ளதாக கடந்த 2 நாட்களுக்கு முன் டிரம்ப் எச்சரித்திருந்தார். வணிகம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் பேசவே விரும்பவில்லை, பேச்சுவார்த்தைகள் எங்கும் செல்லவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.