கொரோனா பரவலுக்கு யார் காரணம்? பிளாக் லைவ்ஸ் மேட்டர் இளசுகள் மீது பழி!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (13:21 IST)
இன மற்றும் நிற பாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் கொரோனா பரவ காரணமாகியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.56 கோடியாக அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 4,169,991 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும் அந்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 147,333 பேர் பலியாகியுள்ளனர் என்பதும், 1,979,617  பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் இன மற்றும் நிற பாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் கொரோனா பரவ காரணமாகியுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, போலீஸுக்கு எதிராகவும் இனபாகுபாடு ந்திராகபும் போராட்டம் நடத்திய பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம். விடுமுறை நாட்கள், பார்கள், கடற்கரைகளில் மக்கள் அதிகம் கூடியதும் சுமார் 3,000 கிமி எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் மெக்சிகோவும் நோய் பரவலுக்கான காரணிகள் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்