கொரோனா இல்லாமலே ஸ்ட்ரிக்டு காட்டும் வடகொரியா! – மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை!

வெள்ளி, 24 ஜூலை 2020 (08:53 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தங்கள் நாட்டில் கொரோனா தொற்றே இல்லை என சாதித்து வரும் வட கொரியா தற்போது மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை என அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்நிலையிலும் தங்கள் நாட்டில் கொரோனா தொற்றே இல்லை என வட கொரியா சாதித்து வருகிறது. ஆனாலும் வட கொரியாவின் பேச்சில் உண்மையில்லை என்றே பலரும் கருதுகிறார்கள்.

சீனாவுக்கு மிக அருகில் உள்ள மற்றும் சீனாவுடன் அதிகளவிலான பொருளாதார, கலாச்சார ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள வட கொரியாவில் கொரோனா பரவாமல் இருக்க வாய்ப்பே இல்லை, வடகொரியா அதை மறைக்கிறது என பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வட கொரியாவில் திடீர் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணிய தவறுபவர்கள் மூன்று மாதங்கள் வட கொரிய அரசாங்கத்திற்கான கட்டாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா இல்லாத ஒரு நாடு இப்படியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை. வடகொரியா கொரோனா இருப்பதை மறைப்பது இதன் மூலம் தெரிகிறது என மற்ற நாட்டு அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்