ரயில் தடம் புரண்டு விபத்து; 6 பேர் பலி

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (08:59 IST)
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட் பகுதியிலிருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு நேற்று ஆம்ட்ராக்(AMTRACK) ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பயணம் செய்தனர். பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் போக்குவரத்து நெரிசலை சீர்செய்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்