இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இந்த விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில்,‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு எச்-4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.
தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்பவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (எச்-4 விசாதாரர்களுக்கு) அங்கு வேலை பார்ப்பதற்கான அனுமதி ரத்தாகும் நிலை உருவாகியுள்ளது.