2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 60 வயது முதியவர் கைது

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (08:25 IST)
நிலக்கோட்டை போலிஸார் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் முத்துமாரி. முத்துமாரிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மணி(60). இவர் முத்துமாரியின் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் மணியை சரமாரியாக தாக்கினர். அவரது கடை மற்றும் வீட்டை அடித்து நொருக்கினர்.
 
பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த முதியவரை, நிலக்கோட்டை போலீஸார் மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர். அவர்மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதுபோல் செய்யும் காம மிருகங்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனையை கொடுத்தால் தான் இது போன்ற துயர சம்பவம் மேலும் நடக்காமல் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்