சரணடையுங்கள் அல்லது பட்டினியில் சாவுங்க! இஸ்ரேல் நடத்தப்போகும் மனிதாபிமானமற்ற தாக்குதல்?

Prasanth Karthick
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (16:11 IST)

கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள மக்களை பட்டினி போட்டு கொல்லும் வகையில் திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்காக இஸ்ரேல் காசா மீது போர் நடத்தி வரும் நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை கொல்வதாக சொல்லி பொதுமக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருவதாக பல நாடுகள் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டி வருகின்றன.

 

இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜெனெரெல்ஸ் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னரும் வெளியேறாமல் இருப்பவர்கள் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர். 10 நாட்களுக்கு பிறகு காசாவிற்குள் உணவு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் மொத்தமாக நிறுத்தப்படும். அந்த பகுதி ராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டு மொத்தமாக மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

இதனால் பாலஸ்தீன் மக்களுக்கு இரண்டே வழிகளே உள்ளது. ஒன்று காசாவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது காசாவிற்குள் பட்டினி கிடந்து சாக வேண்டும். இதை இஸ்ரேல் முற்றிலுமாக காசாவை பாலஸ்தீன மக்களிடம் இருந்து அபகரிக்கும் முயற்சியாகவே பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கருதுகின்றன.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்