நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:59 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலாகவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்