29வது மாடியில் இருந்து குதித்து சாகசம்.. பாரஷூட் வேலை செய்யாததால் பரிதாப பலி..!

Mahendran
திங்கள், 29 ஜனவரி 2024 (11:43 IST)
தாய்லாந்தில் 29வது மாடி கட்டடத்தில் இருந்து SKYDIVE செய்யும்போது பாரஷூட் வேலை செய்யாததால் கீழே விழுந்து ஸ்கைடைவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தாய்லாந்தின் பிரபல ஸ்கைடைவர்  29 மாடி கட்டடத்தில் இருந்து ஸ்கைடைவிங் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எஹ்டிர்பாரத வகையில்  பாரஷூட் வேலை செய்யாததால் கீழே விழுந்து ஸ்கைடைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த விபத்து நேற்று  மாலை நடந்தது என்றும், இறந்தவர் 35 வயதான நபர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் தனது நண்பர்களுடன் ஸ்கைடைவிங் செய்ய வந்திருந்ததாகவும், 29வது மாடி கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்து ஸ்கைடைவிங் செய்ய ஆரம்பித்த நிலையில் திடீரென அவரது பாரஷூட் திறக்கவில்லை என்றும், அதனால், அவர் கட்டிடத்தின் தரையில் விழுந்து உயிரிழந்தார் என்றும் இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
 
இந்த விபத்து குறித்து தாய்லாந்து போலீசார் தீவிஅர் விசாரணை நடந்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்