இந்த நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
அதாவது கொல்கத்தாவைச் சேர்ந்த ஐடிஊழியர் ஸர்தீப் பானர்ஜி(40 வயது), மாரத்தானில் கலந்துகொண்டார். ஹஜி அலி ஜங்சன் அருகே ஓடிக் கொண்டிருக்கும்போது அவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
அதேபோல், மும்பையைச் சேர்ந்த ராஜேந்திர போரா(74) என்ற முதியவரும் மாரத்தானில் பங்கேற்றார். அவர் மெரின் டிரைவ் பகுதியில் ஓடிக் கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இப்போட்டியில் பங்கேற்ற 22 பேர் மூச்சுத் திணறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகிறது.