தாய்லாந்து நாட்டில் மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கம் கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் மீண்டும் மக்களாட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
தாய்லாந்து நாட்டில் கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக தக்சின் ஷினவத்ரா இருந்த நிலையில் அவரது ஆட்சி ராணுவத்தால் கலைக்கப்பட்டது. அதன்பின்னர் 2014ல் அமைக்கப்பட்ட மக்களாட்சியும் ராணுவத்தால் கலைக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் மக்களாட்சிக்கு ஆதரவாக பொதுமக்கள் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்த தொடங்கினர்.
மக்கள் போராட்டத்தில் எதிரொலியாக ஒருவழியாக தாய்லாந்தில் மக்களாட்சிக்கான பிரதமர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் வெளியாக தாமதமாகி வந்தாலும் மக்களாட்சியை அமைப்பத்தில் அனைத்து கட்சிகளும் குறியாக உள்ளன.
2006ல் பிரதமராக பதவி வகித்த தக்சின் ஷினவத்ராவின் மகளான பீதாங்கரன் ஷினவத்ரா இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. அதுபோல மூவ் பார்வர்ட் கட்சி தலைவர் பீடா லிம்ஜாரோயென்ரத் என்பவருக்கும் ஆதரவு உள்ளது. பிரதமராக 376 சீட்டுகள் தேவை என்ற நிலையில் கட்சிகள் கலந்து பேசி கூட்டணி ஆட்சி அமைக்கவும் திட்டமிட்டு வருகின்றன.
தாய்லாந்தில் ராணுவ ஆட்சி மறைந்து மக்களாட்சி மலர உள்ளது அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.