பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பு ஒன்று ரயிலை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும், அந்த ரயிலில் 400 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 100 பேரை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பலுசிஸ்தானம் என்ற பகுதியில் இருந்து புறப்பட்ட ரயில் 400 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் ரயில் ஓட்டுநர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த ரயில் முழுவதுமாக தீவிரவாதிகள் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. ரயிலில் பயணம் செய்த பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 100 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், ரயிலில் பயணித்த 6 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைப்புகள் துரிதமாக செயல்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருப்பதாக பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.