தென் அமெரிக்க நாடான சீலேயில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயால் பலர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் மாத தொடக்கம் முதல் கோடைக் காலங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், உலகின் மிகப்பெரும் காட்டுப்பகுதியான அமேசான் காட்டிலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது லத்தீன் அமெரிக்க நாடான சீலேயில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
யாரும் எதிர்பாராத சமயத்தில் உண்டான இந்த காட்டுத்தீயில் சிக்கி 46 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அப்பகுதியில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மூலமாகவும், விமானங்கள் மூலமாகவும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
சீலேவில் உருவாகியுள்ள இந்த காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்தால் கோடைக்காலத்தில் அது பல தாக்கங்களை ஏற்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.