சாப்ட்வேர் இன்ஜினியர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர் என்றும், இந்த வேலைக்கு பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்பு தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஓரளவு வேலை தெரிந்தால் போதும்; என்னிடம் வாருங்கள், நான் வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன் என உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் தனது சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நீங்கள் பள்ளிக்கு சென்று படித்திருக்க வேண்டும் என்றோ பெரிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை. உங்களிடம் திறமை இருந்தால் போதும். அந்த திறமையை காட்டுங்கள், கை நிறைய சம்பளம் தருகிறேன் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
மஸ்கின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது, அவர் விரைவில் வாங்க இருக்கும் டிக் டாக் சமூக வலைதளத்துக்காகதான் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.