அமெரிக்க பணக்காரர்கள் கையில் அதிகாரம்.. எச்சரிக்கை செய்து பதவி விலகும் ஜோ பைடன்..!

Siva

வியாழன், 16 ஜனவரி 2025 (09:53 IST)
அமெரிக்கா அதிபராக இருக்கும் ஜோ பைடன் இன்னும் ஒரு சில நாட்களில் பதவி விலக இருக்கும் நிலையில், ஒரு சில பணக்காரர்கள் இடையே ஆபத்தான அதிகாரங்கள் குவிந்து வருவதாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, வரும் இருபதாம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில் தற்போது அதிபர் ஜோ பைடன் பதவி விலக உள்ளார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் ஆற்றிய பிரியாவிடை உரையில், அமெரிக்காவில் ஒரு சில பணக்காரர்கள் மத்தியில் ஆபத்தான அதிகாரங்கள் குவிந்து வருகிறது என்றும், எனவே பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.

பணக்காரர்களிடம் அதிகாரம் குவிந்தால், அதிகார துஷ்பிரயோகம் ஏற்படும், ஊடக சுதந்திரம் மறுக்கப்படும், உண்மையான செய்திகளை வெளியிடுவோர் மெல்ல மெல்ல காணாமல் போய்விடுவார்கள் என்றும் பொய்களால் உண்மை மறைக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பிரியாவிடை பேச்சு  அமெரிக்காவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்