ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலுபான்கள் தடை!!

Webdunia
சனி, 21 மே 2022 (09:05 IST)
இந்தியாவை தொடர்ந்து, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலுபான்கள் தடை.


இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை:
 
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோதுமை விலை ஏறிக்கொண்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
 
இந்நிலையில் கோதுமை ஏற்றுமதி தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் பிற நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு கோதுமை தேவை இருந்தால் மத்திய அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் என அறிவித்தது. 
உலக சந்தையில் கோதுமை விலை உயர்வு: 
 
இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததும் உலக சந்தையில் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் கோதுமையுடன் 35 ஆயிரத்துக்கும் அதிகமான விலையில் விற்று வருவதாகவும் இது புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது. 
 
கோதுமை உற்பத்தியில் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே பற்றாக்குறையை இருப்பதன் காரணமாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தத்தன் காரணமாக இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. 
ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலுபான்கள் தடை:
 
இந்தியாவை தொடர்ந்து, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலுபான்கள் தடை விதித்துள்ளனர். இது குறித்து வெளியான அறிக்கையில், கோதுமை ஏற்றுமதியை நிறுத்துமாறு நாட்டிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களுக்கும் நிதி மந்திரி முல்லா ஹிதாயத்துல்லா பத்ரி உத்தரவிட்டுள்ளதாகவும், நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு பொருட்களுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்