செந்தில் பாலாஜி வழக்கை செப்.30க்குள் விசாரணையை முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (13:10 IST)
செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 
 
போலீஸ் நினைத்தால் 24 மணி நேரத்தில் முடிக்கலாம் அல்லது 24 வருடங்களும் இழுத்து அடிக்கலாம் என்று கூறியுள்ள நீதிபதிகள் ஆறு மாத அவகாசம் தேவை என்ற தமிழக குற்றப்பிரிவு காவல் துறையின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.  
 
இந்த நிலையில் தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறுவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்