செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை மனுத்தாக்கல்.. இன்னும் சில மணி நேரத்தில் உத்தரவு..!

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (17:01 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு மீது இன்னும் சில மணி நேரத்தில் நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்று  அவருடைய மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என்றும் ஐந்து நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க  சற்றுமுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 
 
அமலாக்கத்துறை மனு மீது நீதிபதி அல்லி இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்