தற்கொலை செய்துகொள்ள இயந்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள நிலையில் அந்த இயந்திரத்திற்கு அரசும் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தற்கொலை செய்வதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்திற்கு அனுமதி அளித்தது சுவிட்சர்லாந்து அரசு என்பது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் 1,300 பேர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அந்நாட்டில் தற்கொலை செய்து கொள்ள புதிய இயந்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது
எந்தவித அச்சமும் இல்லாமல் வலியில்லாமல் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை மூலம் இறப்பை இந்த இயந்திரம் நிகழ்த்துவதாகவும் அடுத்த ஆண்டு முதல் இந்த இயந்திரம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது
தற்கொலை செய்து கொள்வதே குற்றம் என்று அனைத்து நாடுகளும் கூறிவரும் நிலையில் சுவிட்சர்லாந்து நாடு தற்கொலை செய்து சாக உதவும் இயந்திரத்திற்கு அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது