தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என கூறிய பாஜக பிரமுகருக்கு ஜாமின்!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:59 IST)
தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டலாக கூறிய பாஜக பிரமுகருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தமிழக அரசு குறைக்காவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் தயார் என அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் என்பவர் பொதுவெளியில் பேசினார்
 
இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக தலைவர் ஐயப்பனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்