வாக்காளர்கள் மீது துப்பாக்கி சூடு: இலங்கையில் பயங்கரம்!

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (11:15 IST)
இலங்கையில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க சென்ற மக்கள் மீது மர்ம கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக முஸ்லீம் வாக்காளர்கள் சிலர் பேருந்தில் வந்து கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது பேருந்தின் குறுக்கே டயரை கொளுத்தி வீசிய மர்ம கும்பல், அதில் இருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். பிறகு கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர்சேதங்கள் குறித்து தகவல்கள் தெரியவரவில்லை.

வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ள இந்த சம்பவம் இலங்கையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்