எரிபொருள் வாங்க பணமில்லை: ரஷ்யாவிடம் கடனுக்கு கச்சா எண்ணெய் கேட்ட இலங்கை!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (20:32 IST)
எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் ரஷ்யாவிடம் இலங்கை கச்சா எண்ணெய் கடன் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உத்தரவிடு உள்ளன 
ஆனால் இதையும் மீறி இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஏராளமான கச்ச எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் வாங்கி வருகின்றன
 
இந்த நிலையில் தற்போது பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை சலுகை விலையில் கடனுக்கு கச்சா எண்ணெய் வழங்கும்படி ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது
 
இதற்காக கடந்த மாதம் இலங்கை அமைச்சர்கள் ரஷ்யா சென்ற நிலையில் தற்போது இலங்கைக்கு ரஷ்ய அதிகாரிகள்  வந்து பார்வையிட்ட தாக கூறப்படுகிறது அனேகமாக கச்சா எண்ணெய்யை இலங்கைக்கு ரஷ்யா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்