அனுமதித்தது கொரோனாவால், தாக்கியதோ காதல் நோய்! – ஸ்பெயினில் மலர்ந்த காதல் கதை!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (09:14 IST)
ஸ்பெயினில் கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வார்டில் வயதான இருவரிடையே உருவான காதல் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதலாக கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஒட்டிய முதற்கட்ட பரவலின்போது சீனாவிற்கு பிறகு அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் இருந்து வந்தது. தற்போது அங்கு வீரியமிக்க கொரோனாவின் பரவலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஸ்பெயினின் மேட்ரிட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 72 வயதான பெர்ணாண்டோ என்பவரும், 62 வயது ரொசரியோ என்பவரும் கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்தபோது இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் இருவரும் சமீபத்தில் மோதிரம் மாற்றி கொரோனா வார்டிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்