கமல் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் கமலுடன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதில் பிரகாஷ்ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சத்யராஜைதான் அனுகினாராம் இயக்குனர் கௌதம் மேனன். ஆனால் அவர் மறுக்கவே பின்னர் அருண் பாண்டியனைக் கேட்டுள்ளார். அவரும் மறுக்கவே பின்னர் பிரகாஷ்ராஜ் அனுகி அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அப்போது பிரகாஷ்ராஜ் வில்லனாகவும் குணச்சித்திர நடிப்பிலும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் கலக்கி வந்ததால் அவர் பல நிபந்தனைகளுக்குப் பிறகே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தாராம், படப்பிடிப்பின் போது அவருக்காக சில நாட்கள் கமல்ஹாசன் காத்திருந்து நடித்துக் கொடுத்தாராம்.