சூரிய சக்தியில் இயங்கும் கார்.. நெதர்லாந்து நிறுவனம் புது முயற்சி!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (17:51 IST)
நெதர்லாந்தை சேர்ந்த கார் நிறுவனம் ஒன்று முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் கார் ஒன்றை வடிவமைத்துள்ளது வைரலாகியுள்ளது.

தற்போதைய அறிவியல் வளர்ச்சி உலகில் போக்குவரத்திற்கு கார் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்க வேண்டும் என்பது ஒரு தேவையாக மாறி வருகிறது. அதேசமயம் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் பற்றாக்குறை போன்றவையும் பிரச்சினையாகி வருகிறது.

இதனால் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சாரத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலான கார்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த கார் நிறுவனம் லைட் இயர் ஜீரோ (Lightyear 0) என்ற அதிநவீன காரை வடிவமைத்துள்ளது. பெட்ரோல், சார்ஜ் போடுவது போன்ற சிக்கல்கள் இல்லாமல் சூரிய ஒளியில் சார்ஜ் செய்து கொண்டு இந்த கார் இயங்கும்.

நல்ல வெயில் உள்ள நாடுகளில் 7 மாதங்களுக்கு சார்ஜ் போடாமலே இந்த காரை பயன்படுத்த முடியும் என்றும், ஒரு நாளைக்கு 70 கி.மீ வரை பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்