அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம் விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளதாவது, கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.