பீகார் மாநிலம் தர்பங்காவில், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால், மருத்துவமனை வளாகத்தில் வைத்து தனது மருமகனை மாமனாரே சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் கலப்புத் திருமணத்திற்கு தன்யாவின் குடும்பத்தினருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.நேற்றிரவு தன்யாவின் தந்தை பிரேம்சங்கர் ஜா, ராகுலை தேடி வந்துள்ளார். அப்போது, தன்யா பிரியா கண்முன்னேயே, ராகுலை மார்பில் துப்பாக்கியை வைத்து சுட்டு கொன்றுள்ளார். சுட்டவுடன் ராகுல் உடல் தன்யாவின் மடியில் விழுந்து உயிர் பிரிந்தது.
இந்த சம்பவத்தைக் கண்ட ராகுலின் சக மாணவர்கள், பிரேம்சங்கர் ஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த பிரேம்சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.