அடாவடியில் பாகிஸ்தான்: ஒரே ஒரு பாடலுக்காக செய்த வேலை!!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (15:01 IST)
பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு நடனமாடியதற்காக தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் புல்வாமாவில் நடந்த பயங்கர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது.
 
இந்த தாக்குதலை நாங்கள் நடத்தியதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா எனவும், நீங்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு நாங்களும் தாக்குதல் நடத்துவோம் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
 
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சில குழந்தைகள் இந்தியப் பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு பாகிஸ்தான் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.
 
இதையடுத்து பாகிஸ்தான் கல்வித்துறை, தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதாக அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்