ஜூஸுக்கு பதிலாக மாணவர்களின் ரத்தத்தை குடிக்கப் பார்த்த மாணவிகள்

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (13:19 IST)
அமெரிக்காவில் 2 சிறுமிகள் மாணவர்களின் ரத்தத்தை குடிக்கப்பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் பார்டோ பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மானவிகள் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகள், ஆண்கள் பாத்ரூமிற்கு பக்கத்தில் நின்று கொண்டு நின்றிருந்தனர். அவர்களை பார்த்து சந்தேகித்த பள்ளி ஊழியர்கள், அவர்களை சோதனை செய்ததில் சிறுமிகள் இருவரிடமும் கத்தி இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரிக்கவே, பல அதிர்ச்சிகரமான தகவல்களை சொல்லினர்.
 
தங்களுக்கு மனித ரத்தத்தை குடிக்க ஆசையாக இருந்ததால் சக மாணவர்களை கொல்ல திட்டமிட்டதாக அவர்கள் கூறினார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள் இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சிறுமிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்