பாகிஸ்தானில் ராணுவத்தின் கையில் அரசு: இம்ரான் கான் வெறும் பொம்மையா?

சனி, 22 செப்டம்பர் 2018 (16:53 IST)
பாகிஸ்தான் பிரதமாராக இம்ரான் கான் பதவியேற்று, இந்தியாவுடன் அமைதியான சூழல் நிலவுவதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். 

 
 
இந்நிலையில் இம்ரான் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பின்வருமாறு பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவர் மிகவும் நல்ல மனிதர். 
 
ராணுவத்தின் பின்புலத்துடனேயே அவர் பிரதமர் பதவியில் அமர்ந்துள்ளார். இந்தியாவில் அரசின் கையில் ராணுவம் உள்ளது. பாகிஸ்தானில் ராணுவத்தின் கையில் அரசு உள்ளது. 
 
இந்தியாவுடன் அமைதி பாராட்ட பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்தால் அதற்கு இம்ரான் கான் உதவியாக இருப்பார். இந்தியாவுடன் விரோதம் நீடிக்க ராணுவம் விரும்பினால் அதற்கும் இம்ரான் உரத்த குரலாக இருப்பார். 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் ராணுவம் எடுக்கும் முடிவே தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்