ராஜினாமா செய்து நோட்டீஸ் பீரியடில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (17:58 IST)
தங்களுடைய நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு இராஜினாமா செய்து நோட்டீஸ் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமொன்று அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவை சேர்ந்த கொரில்லா என்ற நிறுவனத்தின் நிறுவனர் பிராங்கோ என்பவர் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தங்களுடைய நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு அதன்பின் ராஜினாமா செய்துவிட்டு நோட்டீஸ் பீரியடில் இருக்கும் ஊழியர்களுக்கு 10 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
தங்களது நிறுவனத்தின் ஊழியர்கள் வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கு எந்தவிதமான குறைபாடும் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு என அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்