இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது , அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் இஸ்பனில் உள்ள சான்டா மரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் குறை பிறந்ததால், அக்குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க அங்கு படுக்கைகள் காலியாக இல்லை, அதனால் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி மருத்துவமனை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது , தாய் மற்றும் குழந்தையின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்துள்ளது,. சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனையில் தாய் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்த போது, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.