சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் உலக முழுவதும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
கொரோனா வைரஸால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகள் கடும் மனித இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்பது புள்ளி விவரம் இதோ...
# உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 200 நாடுகளுக்கு பரவி உள்ளதாக தகவல்.
# உலகளவில் கொரோனா உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது.
# உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆக அதிகரிப்பு.
# உலகளவில் கொரோனா வைரஸால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,65,035 பேர் குணமடைந்துள்ளனர்.
# இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,591 ஆக அதிகரிப்பு.
# ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,716 ஆக அதிகரிப்பு.
# அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,63,479 ஆக அதிகரிப்பு.
# இந்தியாவில் கொரோனாவால் 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 32 ஆக அதிகரிப்பு, 102 பேர் குணமடைந்துள்ளனர்.