அமெரிக்க எல்லையில் குவியும் குடியேறிகள்!

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (10:57 IST)
மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து கூட்டமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்ற நூற்றுக்கணக்கான குடியேறிகள் மெக்ஸிகோவின் தெற்கு எல்லையில் இருக்கும் நுழைவாயிலை உடைத்து அமெரிக்காவுக்குள் வர முயன்றுள்ளனர்.
 
குவாட்டமாலா எல்லை தடுப்புக்களை உடைத்து நுழைந்த குடியேறிகள் ராணுவம் இல்லாத பகுதியில் கலவர தடுப்பு போலீசாருடன் மோதினர். அமெரிக்காவில் நுழைய விடாமல் குடியேறிகளை தடுத்து வைப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மெக்ஸிகோவுக்கு நன்றி தெரிவித்தார்.
 
வன்முறை மற்றும் வறுமையால் தாங்கள் உயிர்தப்பி வருவதாக ஹாண்டுரஸை சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் உள்ளடங்கிய இந்த குடியேறிகள் கூறுகின்றனர். அமெரிக்க எல்லையை மூடப்போவதாகவும், தேவைப்பட்டால் ராணுவம் இதில் ஈடுபடுத்தப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்