லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதால் அந்நகரே உருக்குலைந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த விபத்தில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
வெடி விபத்து நடந்த கட்டடத்தின் அருகே 3 மணி நேரத்திற்கு முன்னதாக சிறிய அளவில் ஒரு தீ விபத்து நடந்ததாகவும், அந்த தீயை அணைக்கும் பணியில் இருந்தவர்கள் துறைமுக வெடிவிபத்தால் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அஞ்சப்படுவதாகவும் கூறப்படுகிறது
கடந்த 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வேதிப்பொருட்கள் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்ததாகவும், இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்