லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி சம்பவம்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (23:49 IST)

தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன.

2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை.

இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.
 

கொலை வழக்கு
 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கை ஐ.நா தீர்ப்பாயம் விசாரித்தது.

இதன் தீர்ப்பு வர இருக்கும் சூழலில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த வழக்கில் இரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.

இரண்டாம் வெடிப்பு ஹரீரி வீடு அருகே நிகழ்ந்திருக்கலாம்.

பலர் காயம் அடைந்துள்ளதாக, மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் லெபனான் சுகாதார துறை அமைச்சர்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. ஆனால் நாட்டின் தற்போதைய மொத்த எண்ணிக்கையில் தெரியாமல் இருக்கலாம்
 
**புதிய தொற்றுகளுக்கான முந்தைய தரவுகள் 3 நாட்களின் சராசரி. எண்ணிக்கை தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால், தற்போதைய தேதிக்கான சராசரியை கணக்கிட இயலவில்லை.
 
ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்
 
கடைசியாக பதிவேற்றியது : 24 ஜூலை, 2020, பிற்பகல் 1:21 IST

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்