போரை நிறுத்த சொன்ன தொழிலதிபர்; தவறி விழுந்து மரணம்! – ரஷ்யாவில் சோகம்!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (13:10 IST)
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த சொல்லி கோரிக்கை விடுத்த தொழிலதிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்த போரினால் இரு தரப்பு வீரர்களும் உயிரிழந்துள்ளதுடன், பல லட்சம் மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரபல ரஷ்ய தொழிலதிபரும், லுக் ஆயில் எண்ணெய் நிறுவனத்தின் தலைவருமான ராவில் மகனோவ் உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது மகனோவ் மருத்துவமனை ஒன்றில் ஜன்னல் வழியே தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல தொழிலதிபர் மாடி ஜன்னலில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்