நேபாள சிறையில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோட்டம்.. அதில் 540 கைதிகள் இந்தியர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran

திங்கள், 13 அக்டோபர் 2025 (13:32 IST)
அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் ஊழல் மற்றும் சமூக ஊடக தடைக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த போராட்டத்தின் விளைவாக பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்து, நாட்டின் ஆட்சி கலைக்கப்பட்டது.
 
இந்த அரசியல் குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு, நேபாளத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து சுமார் 13,000 கைதிகள் தப்பியோடியுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
 
தப்பியோடியவர்களில், நேபாளத்தை சேர்ந்த 5,000 தண்டனை கைதிகள் மட்டுமின்றி, இந்தியாவின் 540 கைதிகள் உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தப்பினர்.  அதிக எண்ணிக்கையிலான இந்திய கைதிகள் தப்பியோடியுள்ளதால், இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
 
தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கு நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தப்பியோடிய அனைவரும் உடனடியாக தாமாகவே சிறைகளுக்குத் திரும்புமாறு நேபாள உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்